உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்திய மாணவியின் உறையவைக்கும் பயணம்

268
Advertisement

உக்ரைன் மீதான ரஷ்யா இராணுவ நடவடிக்கையால் இதுவரை இரண்டு மில்லியனிற்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து உள்ளனர்.போர் பதற்றம் தணியாத நிலையில் இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை இதுவரை .

இன்னும் மீட்கப்படாத இந்தியர்களை மீட்க இந்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது . இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கிய அதே நாளில் தான் , கார்கிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்தியாவை சேர்ந்த அர்னாஸ் நஸ்ரின் என்ற மாணவி அங்கிருந்து இந்தியா திரும்பவிருந்தார்.

அதன்பின் ரஷ்யா இராணுவ நடவடிக்கைக்கு மத்தியில் அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் தான் வெளியேறிய அனுபவத்தை பகிர்ந்து உள்ளார் .

இது குறித்து அவர் கூறுகையில் ,

அன்று காலை , நான் இந்தியா திரும்பவிருந்த விமானம் ரத்து என தகவல் கிடைத்தது. இருந்தும் விமான நிலையத்திற்கு செல்ல முடிவு எடுத்து செல்லும் வழியில் தான் தெரிந்தது ரஷ்ய இராணுவ படைகள் உக்ரைனுள்ள நுழைந்துவிட்டது என்று . இதனால் விமான நிலையமும் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது. குண்டுவீச்சு சத்தம் மட்டுமே கேட்க முடிந்தது. பின் நான் என் வீட்டிற்கு போனில் தொடர்புகொண்டு என் சகோதரியிடம் நிலைமையைப் பற்றி தெரிவித்தேன்.

அவள் மூலம் , கீவ்வில் நான் தங்க ஏற்பாடு செய்த என் ஆலோசகரை தொடர்பு கொண்டோம். அவர் அங்கிருந்து பாதுகாப்பான விடுதி ஒன்றில் தங்க சொன்னார். அந்த விடுதிக்கு செல்ல கார் ஒன்றை முன்பதிவு செய்தோம்.

அப்போது ரஷ்ய டேங்க் ஒன்று சாலையில் சென்ற கார் மீது ஏறி சென்றது . எனவே, நாங்கள் நடந்தே செல்ல முடிவெடுத்தான் . அதன் படி நாங்கள் அந்த விடுதி சென்றடைந்தோம்,

அங்கு சென்றபின் தான் தெரிந்தது , அந்த விடுதி உக்ரைன் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது. உயரமான தளங்களில் ஸ்னைப்பர்கள் நிலைநிறுத்தப்பட்டனர், எங்கள் ஜன்னல்கள் வழியாக ரஷ்ய வீரர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதைக் கண்டோம்.

எங்களை சுற்றி குண்டு சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்தது .இந்நிலையில் வெளிய செல்வது பாதுகாமா இருக்காது என அங்கேயே தங்கினோம்.

மூன்று நாட்கள் குடிக்க தண்ணீர் இல்லை , மதியம் உணவு சில பிஸ்கெட் துண்டுகள் , இரவு உணவாக ரொட்டி துண்டை சாப்பிட்டோம்.

செர்னோபில் மின் நிலையம் கைப்பற்றப்பட்ட செய்தி கிடைத்ததது. மின்வாரியத்தில் ஏதேனும் தவறு நடந்தால், பதுங்கு குழிகளில் இருந்தாலும் யாரும் உயிர் பிழைக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். அதனால் எல்லை பகுதியை அடைய ஒரு வழியைக் கண்டுபிடித்து செல்லலாம் என அங்கிருந்தவர்களை கேட்டேன், அவர்களில் சிலர் ஒப்புக்கொண்டனர்.

திட்டமிட்ட படி , குண்டு சந்தம் கேட்காத பொது மெட்ரோ வழியாக நகரத்தை விட்டு வெளியேற தொடங்கினோம். ஒருகட்டத்தில் மெட்ரோ சுரங்கத்தில் உக்ரைன் இராணுவ வீரர்களிடம் துப்பாக்கி முனையில் விசாரிக்கப்பட்டேன் .பின் , தாங்கள் இங்கே இருக்கும் காரணத்தை அவர்களுக்கு விளக்கினோம். வலுவாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அதுவே தன்னைத் தொடர வைத்ததாகவும் நஸ்ரின் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் , நாங்கள் ரயிலில் ஏற முயன்றபோது, வெளியே தள்ளப்பட்டோம். ஒரு கட்டத்தில், மக்கள் என் தோள்களில் ஏறினர், நான் ரயிலில் ஏற சிரமப்பட்டேன் கிட்டத்தட்ட வெளியே தொங்கிக்கொண்டிருந்தபோது ஒரு மாணவர் என்னை உள்ளே இழுத்தார். அங்கிருந்து மற்றொரு இடத்தை அடைந்தோம்.

அங்கிருந்து ஸ்லோவாக்கியா எல்லையை அடைந்தோம். தொடர்ந்து எல்லைக்கு 6 கிலோமீட்டர் நடக்க வேண்டும். அங்கு சென்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டோம். எல்லையில், இந்திய தூதரகம் எங்கள் தங்குமிடத்தையும் உணவையும் கவனித்துக்கொண்டது. எல்லையைத் தாண்டிய பிறகு எல்லாம் சுமுகமாக இருந்தது . என தெரிவித்தார்