சுவிஸ் ஓபன் ” பி.வி.சிந்து, பிரனோய் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் “

409
Advertisement

இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து, சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் சுவிஸ் ஓபன் 2022 இன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

79 நிமிடங்கள் நீடித்த அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்தின் சுபனிடா கேத்தோங்கை 21-18, 15-21, 21-19 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

இந்தியாவின் நட்சத்திர வீரர் எச்.எஸ்.பிரனோய் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தல் பிரனோய், இந்தோனேசிய வீரர் சினிசுகா கின்டிங்கை 21-19 19-21 21-18 என்ற செட்கணக்கில் தோற்கடித்தார்.