இந்திய அணியின் வரலாற்று சாதனை தொடருமா?

  416
  india-vs-pakistan
  Advertisement

  டி20 உலகக்கோப்பையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று இரவு நடைபெற உள்ளது.

  உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற வரலாறு, இன்றைய போட்டியிலும் தொடருமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

  டி20 உலகக்கோப்பை போட்டி கடந்த 17ஆம் தேதி தொடங்கிய நிலையில், தகுதிச்சுற்று போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தன.

  இதைதொடர்ந்து சூப்பர்-12 சுற்று போட்டிகள் நேற்று தொடங்கியது.

  இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெறுகிறது.

  இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்க உள்ளது.

  சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் உச்சகட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற வரலாறு இன்றைய போட்டியிலும் நீடிக்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். Erotic adult massage near me.

  உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் இதற்கு முன் 12 முறை மோதியதில் அனைத்து ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

  ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் 7 முறையும், டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 5 முறையும் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.

  நடப்பு உலகக்கோப்பை தொடரில், இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்துடன் உள்ளதால், இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.