அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தில் உள்ளது…

112
Advertisement

இந்திய மாணவர்கள் ஏராளமானோர் அமெரிக்காவுக்கு சென்று படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுவரை, அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் சீனாவைச் சேர்ந்தவர்கள் முதலிடத்திலும், இந்தியாவை சேர்ந்தவர்கள் 2வது இடத்திலும் இருந்து வந்தனர். ஆனால், அமெரிக்க குடியுரிமை மற்றும் புலம்பெயர்தல் சேவைப்பிரிவு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் இருந்து வந்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை11 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.