திருச்சி மாவட்டத்தில் பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காததை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

27
Advertisement

திருச்சி பெரியார் ஈவேரா அரசு கலை கல்லூரியில் ஏழை எளிய மிகவும் பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் , முதல் பட்டதாரி குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் பயின்று வருகின்றனர் .  எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் ஊக்கத்தொகை ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும். ஆனால் அகாடமிக் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையிலும் அவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படாததால் மாணவர்கள் தர்ணா போரட்டதில் ஈடுபட்டனர். பின்னர் ஆதி திராவிட நலத்துறை அதிகாரிகள்  பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டதை தொடர்ந்து. கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.