கர்நாடகாவில், வாக்கு சேகரிப்பின்போது  ஜனதா தளம் கட்சி வேட்பாளருக்கு தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்த விட்டியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன…!

91
Advertisement

கர்நாடக சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், மண்டியா மாவட்டம் மலவள்ளி தொகுதியில் ஜனதா தளம் கட்சி சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. அன்னதாணி போட்டியிடுகிறார். நேற்று அவர் ஹலகூர் அருகே உள்ள மலவள்ளி தொகுதிக்கு உட்பட்ட பாலேஹொன்னி கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு கிராம மக்கள் மற்றும் ஜனதா தளம் கட்சி தொண்டர்கள் சேர்ந்து பாலாபிஷேகம் செய்தனர். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும், குழந்தைகளின் அத்தியாவசிய உணவு பொருளான பாலை இவ்வாறு வீணாக்குவதா என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.