ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

95
Advertisement

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிம்பர் காலி – பூஞ்ச் இடையே ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்ததாக முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் நடத்திய சோதனையில், பாடா துரியன் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தபோது தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியது தெரிய வந்துள்ளது. குண்டுவெடிப்பில்  ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்ததில்  5 வீரர்கள் உயிரிழந்து விட்டதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராஷ்டிரிய ரைபிள்ஸ் படைப்பிரிவின் 5 வீரர்கள் மரணம் அடைந்து விட்டனர்.

படுகாயமடைந்த ராணுவ வீரர் ஒருவர் ராஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையின் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காஷ்மீரில் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.