மதுவில் இருந்த “சயனைடு!” மது குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்! மயிலாடுதுறையில் பகீர்…

218
Advertisement

மதுபானம் குடித்து இருவர் மயிலாடுதுறையில் உயிரிழந்த நிலையில், அவர்கள் குடித்த மதுவில் சயனைடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை தத்தங்குடியில் வசித்து வருபவர் பழனி குருநாதன். 55 வயதான இவர் மங்கைநல்லூரில் இரும்புப் பட்டறை கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது பட்டறையில் அதே பகுதியைச் சேர்ந்த பூராசாமி (65) என்பவர் வேலை செய்து வந்தார்.

இவர்கள் இருவரும் நேற்று மாலை வழக்கம் போல 5 மணி வரை வேலை செய்கிறார்கள். அதன் பின் சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி நிலையில் இருந்துள்ளனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மதுவில் சயனைடு கலந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்த மயிலாடுதுறை ஆட்சியர், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் இந்த சம்பவம் குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்றும் தெரிவித்தார். மேலும், அவர்கள் எந்த டாஸ்மாக்கில் மதுவை வாங்கினர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சயனைடு கலந்து கொண்டதால் அது கொலையா இல்லை தற்கொலை என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.