கோவையில், தேசிய பறவையான மயில்கள் மின் கம்பியில் சிக்கி உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்…

160
Advertisement

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளான துடியலூர், வடவள்ளி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான மயில்கள் உணவிற்காக விளை நிலங்களிலும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் வருகை தருகின்றன.

இந்நிலையில், மாநகரின் முக்கிய  மையப்பகுதியான ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஏராளமான அரசு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர், போன்ற ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அதனை சுற்றியுள்ள காலி இடங்களில் ஏராளமான மயில்கள் உள்ளன.  அவை மின் கம்பிகளில் சிக்கி பரிதாபமாக பலியாகும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. இந்நிலையில், ரேஸ்கோர்ஸ் பகுதியில்  உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் சிக்கி 2 மயில்கள் பரிதாபமாக பலியாகி உள்ளன. எனவே, இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.