பீகாரில், ஆயிரத்து 717 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

97
Advertisement

பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் அகுவானி – சுல்தாங்கஞ்ச் பகுதியை இணைக்கும் பாலம் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வருகிறது.

ஆயிரத்து 717 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாலத்திற்கு கடந்த 2015ஆம் ஆண்டு முதலமைச்சர் நிதிஷ் குமார் அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகளை தொடக்கி வைத்தார். கடந்த ஆண்டு பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்ததால், கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதனிடையே கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், பாலத்தின் இரண்டு பகுதிகள் திடீரென உடைந்து ஆற்றில் விழுந்தன. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. பாலம் இடிந்து விழுந்ததை அங்கிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்தனர்.