பொய் பேசிவரும் அண்ணாமலை..
ஒரே மேடையில் விவாதிக்கத்தயாரா ?
ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி சவால்….

413
Advertisement

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவருமான ஹென்றி நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த கால பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்த அ.தி.மு.க. ஆட்சியில் மாவட்ட அளவில் செயல்படுகிற டி.டி-சி.பி. என்ற நகர்ப்புற ஊரமைப்பு இயக்குனரகத்தில் வெறும் 5 ஏக்கர் வரை தான் அனுமதி பெறக்கூடிய சூழல் இருந்தது.

நகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற பகுதிகளில் இரண்டரை ஏக்கர் மட்டுமே அனுமதி பெற முடிந்தது.
தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு எங்களின் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று 5 ஏக்கர் என்பதை 10 ஏக்கர் வரைக்கும் இரண்டரை ஏக்கருக்கு பதில் 5 ஏக்கர் வரைக்கும் மாவட்ட அளவிலேயே அங்கீகாரம் பெறக் கூடிய வகையிலும் நடைமுறையை மாற்றி அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெறும் 15 ஆயிரம் சதுர அடி வரை உள்ள கட்டிடத்திற்கு மாவட்ட அளவில் உள்ள அலுவலகத்தின் அனுமதி பெறக்கூடிய வகையில் தான் கடந்த கால ஆட்சியில் சட்டங்கள் இருந்தன.

அதை மாற்றி அமைத்து தற்போது 40 ஆயிரம் சதுர அடி வரை அனுமதி பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்டத்திலேயே கட்டிட திட்ட அனுமதி பெறுவதற்கான வழிவகைகளையும் இந்த அரசு செய்து கொடுத்திருக்கிறது.

சென்னையை போன்று கோவை, திருப்பூர், மதுரை, சேலம், ஓசூர், திருச்சி போன்ற பெரு நகரங்களிலும் பெரு நகர வளர்ச்சி குழுமங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு காண்பதற்கு தமிழக அரசு வழி வகை செய்து கொடுத்திருக்கிறது.

இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையில் இதுவரை எந்த அரசும் செய்யாத மாபெரும் திட்டங்களை ரியல் எஸ்டேட் துறையை சீர்தூக்ககூடிய வகையில் ஒற்றை சாளர முறையில் அனுமதி என்ற திட்டத்தை தற்போதைய தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் கூட இந்த திட்டத்தை கொண்டு வரவில்லை. அந்த ஆட்சியில் ரியல் எஸ்டேட் துறை எந்த அளவிற்கு நசுக்கப்பட்டது. அதிகார வரம்பை குறைத்து எந்த அளவுக்கு நசுக்க முடியுமோ, அந்த அளவுக்கு நசுக்கியது. அதையெல்லாம் இந்த அரசு ஆட்சி பொறுப்பேற்றவுடன் மாற்றி அமைத்தது.
கட்டுமானம் சார்ந்த ரியல் எஸ்டேட் துறை எழுச்சி பெறுவதற்கு என்ன திட்டங்கள் எல்லாம் கொண்டு வரமுடியுமோ அவை அனைத்தையும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில்
ஜி ஸ்கொயர் என்ற நிறுவனத்திற்கு நிறுவனத்துக்கு 8 நாளில் அனுமதி கொடுப்பட்டுள்ளதாக தமிழக பிஜேபி தலைவர்
அண்ணாமலை கூறியுள்ள குற்றசாட்டு மிகவும் அபத்தமானது.
எந்த வித புரிதலும் இல்லாமல் அரை வேக்காட்டுத் தனமாக பேசும் திரு.அண்ணாமலை பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது ஜி ஸ்கொயருக்கு சொந்தமாக கோவை மாவட்டத்தில் உள்ள இடத்துக்கு 8 நாட்களில் அனுமதி கொடுத்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

அவர் கூறியது உண்மைக்கு புறம்பானது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தான் அந்த 122 ஏக்கர் நிலத்துக்கு உள்ளூர் திட்ட குழுமம் மூலம் நில பயன்பாடு மாற்றம் செய்வது குறித்து விண்ணப்பம் கொடுத்தனர்.

அந்த விண்ணப்பம் கொடுத்து கிட்டதட்ட 4 மாதங்கள் கழித்து கலெக்டர் அலுவலகத்தில் என்.ஓ.சி. கொடுக்கப்பட்டு உள்ளூர் திட்ட குழுமத்தில் அந்த கோப்பு அனுப்பப்பட்டு பின்னர் தலைமை அலுவலகத்துக்கு டெக்னிக்கல் கிளியரன்சுக்காக அனுப்பப்பட்டது. அங்கு கிட்டதட்ட 6 மாதம் கழித்து கடந்த ஜனவரி மாதம் தான் திட்ட அனுமதி கொடுக்கப்பட்டது.
அதாவது விண்ணப்பம் செய்து 24 மாதங்கள் கழித்து தான் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஜி ஸ்கொயர் என்ற நிறுவனம் 2013 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட நிறுவனம். அது ஒரு மார்க்கெட்டிங் கம்பெனி. எந்த காலத்திலும் அவர்கள் நிலங்களை வாங்குவதில்லை. அபிவிருத்தி செய்வதில்லை
எனவே ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்ததில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை.
ஆனால் மேடைக்கு மேடை உண்மைக்கு மாறாக பேசி வரும் பிஜேபி தலைவர் தலைவர் அண்ணாமலை தைரியமிருந்தால் என்னோடு நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என சவால் விடுத்துள்ளார்..