பா.ஜ.க.வின் பிரிவினைகளுக்கு இரையாகாமல், நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்..

122
Advertisement

சென்னை புளியந்தோப்பில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி ராபின்சன் பூங்காவில் திமுக தொடங்கப்பட்டதை நினைவுபடுத்தி, அதே வடசென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்குகிறது என்றார்.

கலைஞரின் ஆட்சி சாமானியர்களுக்கான ஆட்சியாக இருந்தது என்ற அவர், ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கான ஆட்சியாக தமிழ்நாடு ஆட்சியைக் கலைஞர் வடிவமைத்துக் கொடுத்ததாகக் கூறினார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் ஆகஸ்டு 7ஆம் தேதி திறக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

ஆளுநரின் சித்து விளையாட்டுகளை வேடிக்கை பார்க்க முடியாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்தார்.