கர்நாடக சட்மன்ற தேர்தலில் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க இன்றைக்குள் வெளியிடாவி்ட்டால் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரித்துள்ளார்…

102
Advertisement

கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி 166 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆனால், நீண்ட இழுபறிக்குப் பிறகு 2 கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டது.

இதில், தற்போதைய எம்.எல்.ஏ-க்கள் பலருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்துள்ள அவர்களின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியில், எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்ததுடன், பாஜக-வில் இருந்து விலகிய முன்னாள் துணை முதலமைச்சர் லக்ஷ்மன் சவதி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, லஷ்மன் சவதி ஏற்கனவே வெற்றி பெற்ற அதனி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.