புத்தாய்வு திட்டம் : இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

671

தமிழக அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் திறன்களை மேம்படுத்தி பயன்படுத்தும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது.

இதன்படி இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டு காலம் ஊக்க ஊதியத்துடன் பயிற்சி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதலமைச்சர் அலுவலகம், தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் இந்த புத்தாய்வு திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு 5.66 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று அரசு பணிகளில் அமர விரும்பும் இளைஞர்கள் இன்று முதல் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு http://www.bim.edu/Tncmpf எனும் இணையதளத்தில் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.