இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு இனிய செய்தி

199

1 நிமிடம் வரையிலான வீடியோவை பதிவேற்றும் வசதியை சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமின் stories என்ற பிரிவில் முன்பு, 1 நிமிட வீடியோவை செய்தால், அது 15 வினாடி வீடியோக்களாக 4 பிரிவுகளாக பிரிந்து பதிவேற்றம் ஆகும். இதனால் வீடியோ பதிவேற்றம் செய்யும் பயனாளர்கள், 15 வினாடி வீடியோக்களாக மட்டுமே பதிவேற்றும் நிலை இருந்தது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் 1 நிமிடம் வரையிலான வீடியோவை பதிவேற்றும் வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு குறிப்பிட்ட சிலரிடம் மட்டும், இந்த புதிய வசதி பரிசோதிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைவருக்கும் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது