தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு, ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது…

210
Advertisement

தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று முன்தினம் 728 ரூபாயும், நேற்று  352 ரூபாயும், இன்று 200 ரூபாயும் உயர்ந்தது. அதாவது,  3 நாட்களில் மட்டும் ஆயிரத்து 280 ரூபாய் உயர்ந்திருக்கிறது. இதனால், தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு, இன்று ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து, 5 ஆயிரத்து 775 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இனிவரும் நாட்களில், தங்கம் விலை பெரும்பாலும் உயர்வை நோக்கியே செல்லும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் வெள்ளி விலை  கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து, 83 ரூபாய் 70 காசுகளுக்கும், கிலோவுக்கு 900 ரூபாய் உயர்ந்து, 83 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனையாகிறது