சீர்காழி அருகே, டேங்கர் லாரி மீது அரசு சொகுசு பேருந்து மோதிய விபத்தில், 4 பேர் உயிரிழந்தனர்……

108
Advertisement

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புறவழி சாலையில் பாதரகுடி அருகே அரசு சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க, அரசு சொகுசு பேருந்து ஓட்டுநர் சாலையின் இடது புறமாக திருப்ப முயன்றுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்றுகொண்டிருந்த டேங்கர் லாரி மீது வேகமாக மோதியது.

எதிரே வந்த இருசக்கர வாகனம் மீதும் பயங்கரமாக மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பத்மநாபன், அருள்ராஜ், பாலமுருகன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அரசு சொகுசு பேருந்து நடத்துனர் விஜயசாரதி உள்ளிட்ட 26 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், பேருந்து நடத்துனர் விஜயசாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.