மருத்துவ மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதை தடுக்க விசாரணை குழு மற்றும் வாரியம் அமைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்….

227
Advertisement

சென்னையில், மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் இரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது பேசிய அவர், இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கு போதிய விடுதி வசதி, ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். மருத்துவ மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதை தடுக்க ஒவ்வொரு மருத்துவமனையிலும் விசாரணை குழு மற்றும் வாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

10 ஆண்டுகளுக்கு மேலாக மொபைல் கிளினிக் இல் பணியாற்றுகின்ற ஓட்டுநர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தேசிய மருத்துவ ஆணையத்தில் ஊழல் செய்த மருத்துவர்களின் வழக்கு நேர்மையாக நடத்த வேண்டும். செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில், பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட மருத்துவர் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.