சென்னை கே.கே.நகர் RTO அலுவலக மைதானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து நாசமானது.

204
Advertisement

சென்னை கே.கே.நகர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், ராஜமன்னார் சாலை சந்திப்பு மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த மளமளவென பரவி வாகனங்கள் கொளுந்துவிட்டு எரிந்தன. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் இரண்டு பேருந்துகள், லாரி, இரண்டு கார்கள் மற்றும் ஆட்டோக்கள் எரிந்து நாசமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.