முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் சந்திப்பை தொடர்ந்து, இருவரும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்…

86
Advertisement

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று சந்தித்தார்.

சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரனின் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, பண்ருட்டி ராமசந்திரனும் உடன் இருந்தார். இந்த சந்திப்பிக்கு பின்னர் மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பண்ருட்டி ராமசந்திரன், அ.தி.மு.க நலன் கருதி அடுத்தக்கட்ட நவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் இருவரும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.