முதலமைச்சருடன் நிதியமைச்சர் பிடிஆர் சந்திப்பு.. ஆடியோ விவகாரம் குறித்து ஆலோசனையா?

121
Advertisement

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில், மட்டமான அரசியல் செய்பவர்களுக்கு விளம்பரம் தேடித்தர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோர் சொத்து விபரம் குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எந்த பதிலும் அளிக்காதது ஏன் என்று சில எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு பதிலளிக்கும் வகையில், உங்கள் ஒருவன் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். நிதியமைச்சர் பிடி பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் செய்பவர்களுக்கு விளம்பரம் தேடித்தர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி வரும் 7 ஆம் தேதியுடன் 2-ஆம் தேதி நிறைவு செய்து 3-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலவரம் குறித்து, முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர், அமைச்சர்கள் வெளிநாடு செல்ல ஒப்புதல் அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசியல் சூழல் மற்றும் மக்கள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதால், அதற்கு பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.