ஓசூர் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நுரைபொங்கி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்…

168
Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு தென்பெண்ணை ஆற்று நீர் வருகிறது.

இந்நிலையில், கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து வெளியேற்றப்படும் தென்பெண்ணை ஆற்று நீர் நுரைப்பொங்கி துர்நாற்றம் வீசுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  ஆற்று கரையோரத்தில் சாகுபடி செய்யப்படும் கொத்தமல்லி செடியில் நுரை கலந்த தண்ணீர் விழுவதால் கொத்தமல்லி செடிகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையில் ரசாயனம் கலப்பதை தடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.