இறுதி நேரத்தில் ஓடிவந்து  தாலி எடுத்து கொடுத்து திருமணம் நடத்தி வைத்த எடப்பாடி பழனிசாமி

177

அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் கோபாலின் மகன் திருமணம் நன்னிலத்தில் உள்ள தனியார் திருமண  மண்டபத்தில் நடைபெற்றது.

காலை 9 மணி முதல் 10.30 வரை திருமணம் நடைபெறும் என அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரியாக 10.29 மணி நெருங்கிவிட்ட நிலையில் இறுதிநேரத்தில் ஓடிவந்து தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

திருமண நிகழ்வில் முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ் மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.