Engineering படிப்புகளுக்கான புதிய கட்டணம் இதுதான்

232

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கான குறைந்தபட்ச கட்டணம் 79 ஆயிரத்து 600 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 1 லட்சத்து 89 ஆயிரத்து 800 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், டிப்ளோமா படிப்புகளுக்கான கட்டணங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் ஆசிரியர்களின் சம்பள விகிதங்களும் மாற்றப்பட்டுள்ளன என்றும் புதிய விகிதங்களை நாடு முழுவதும் உள்ள தொழிற்கல்வி நிலையங்கள் வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.