மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, குடும்பத்தை பற்றி, திமுக அரசு நினைக்கிறதே தவிர, மக்களை பற்றியும், விவசாயிகளை பற்றியும் கவலைப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
சசிகலா அதிமுகவில் உறுப்பினர் இல்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவுக்கும், சசிகலாவுக்கு சம்பந்தமில்லை என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆளுங்கட்சியை தவிர்த்து, மற்ற அனைத்து கட்சிகளும் எதிர்க்கட்சித்தான் என்றும் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளை முடக்க திமுக அரசு நினைத்தது என்றும் அதற்கு கடும் எதிர்ப்பு வந்ததால், மீண்டும் இயங்கும் என்று அமைச்சர் கூறியதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.