பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூவருக்குப் பகிர்ந்தளிப்பு

    328
    nobel-economics
    Advertisement

    2021ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூவருக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

    அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.

    அந்த வகையில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த 3 பொருளாதார நிபுணர்களுக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

    டேவிட் கார்ட், ஜோஸ்வா டி.அங்ரிஸ்ட், கொய்டோ டபுள்யு இம்பென்ஸ் ஆகியோருக்குப் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    குறைந்தபட்ச ஊதியம், குடியேற்றம், கல்வி ஆகியவற்றில் தொழிலாளர் சந்தை விளைவுகளைப் பகுப்பாய்வு செய்ததற்காக டேவிட் கார்டுக்கும், கேசுவல் ரிலேஷன்ஷிப்பைப் பகுப்பாய்வு செய்தற்காக, ஜோஸ்வா டி.அங்ரிஸ்ட், கொய்டோ டபுள்யு இம்பென்ஸ் ஆகியோருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.