விரைவில் பேருந்துகளில் இ-டிக்கெட் முறை அறிமுகம்

347

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அமைச்சர் சிவசங்கர், பள்ளிக்கூட வாகனங்களில் முன்னும், பின்னும் கேமராக்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், மாணவர்கள் பேருந்தில் செல்வதற்கு ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

பேருந்துகளில் பயணச்சீட்டுக்குப் பதிலாக இ-டிக்கெட் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர், தெரிவித்தார்.

கூகுள் பே, ஜி-பே மற்றும் மொபைல் ஸ்கேனிங் மூலம் பேருந்து டிக்கெட்டுகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசு பேருந்துகளில் இ-டிக்கெட், ஸ்மார்ட் கார்ட் திட்டம் அறிமுகப்படுத்துவதன் மூலம் பொதுமக்கள் எளிதாக டிக்கெட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.