வரும் 16ல் தி.மு.க., – எம்.பி.,க்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

236
Advertisement

மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 20ஆம் தேதி, மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று, தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து இம்மாதம் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில், வரும் 20ஆம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

வீட்டின் முன் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என திமுக தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.