பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் ஆனார் டு ப்ளெஸ்ஸிஸ்.

420
Advertisement

வரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டு ப்ளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினேஷ் கார்த்திக் அல்லது மேக்ஸ்வெல் இருவரில் ஒருவர் கேப்டனாக தேர்வாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏலத்தில் 7 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட டு ப்ளெஸ்ஸியை ஆர்.சி.பி. நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.

பெங்களூரு அணியின் ஏழாவது கேப்டனாக பொறுப்பேற்க உள்ள டு ப்ளெஸ்ஸிக்கு, விராட் கோலி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு அணி மார்ச் 27ம் தேதி நடக்கவுள்ள தங்களது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது.