கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட பாடகர் கானா பாலா… எவ்வளவு வாக்குகள் பெற்றுள்ளார் தெரியுமா!?

511
Advertisement

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. திமுக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

பிரபல கானா பாடகர் பாலா இந்த உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் 6-வது மண்டலம், 72வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டார். இந்த வார்டில் கானா பாலா 6095 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக கட்சியை சேர்ந்த சரவணன் 8303 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த முறை அதே வார்டில் போட்டியிட்ட கானா பாலா 4000 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

பாடகர் கானா பாலா ‘அட்டகத்தி’ படத்தில் இடம் பெற்ற ‘ஆடி போனா ஆவனி. என்ற பாடல் மூலம் தமிழகம் முழுக்க பிரபலமானார். அதையடுத்து பீட்சா, லட்டு தின்ன ஆசையா, சூது கவ்வும், பரதேசி, சேட்டை, உதயம் என பல படங்களில் பாடியுள்ளார். இதுவரை அவர் 100 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார். பல பாடல்கள் எழுதவும் செய்துள்ளார். மேலும் கானா பாடகர் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.