அறிவு இருக்கா? ஆணவம் தலைக்கேறி நிற்கும் அமைச்சர்… மனோ தங்கராஜை திட்டி தீர்த்த பொன் ராதாகிருஷ்ணன்…!

144
Advertisement

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

அப்போது திருவாவடுதுறை ஆதினம் கொடுத்த செங்கோலை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, செங்கோலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினார்.

பின்னர் செங்கோல் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய பிரதமர் மோடி அதனை புதிய நாடாளுமன்றத்தின் லோக் சபா சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வைத்தார்.

அடுத்த 150 ஆண்டுகளுக்கு செங்கோல் அந்த இடத்தில்தான் இருக்கும். இந்நிலையில் பிரதமர் மோடி செங்கோல் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியதை தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.

மோடியின் போட்டோவை தனது சோஷியர் மீடியா பக்கத்தில் ஷேர் செய்த அவர், மூச்சு இருக்கா? மானம்? ரோஷம் என காட்டமாக பதிவிட்டிருந்தார்.