செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு வருவது தெரியாதா? ஜப்பானில் அதிகாரிகளை கடித்த ஸ்டாலின்! என்ன நடந்தது…

121
Advertisement

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், வெளிநாட்டில் இருக்கும் இந்த தருணத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிரடி சோதனை நடத்தி வருகிறார் வருமானவரித்துறை. இந்த ரெய்டு தொடர்பாக திமுக வட்டாரத்தில் விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல்களை நம்மிடம் வழங்கினர்.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதை தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

பல்வேறு டெண்டர் முறைகேடுகளை செய்ததாக செந்தில் பாலாஜி மீது பாஜக, அதிமுக சார்பில் புகார்கள் வருகின்றன.இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.