ஆடும் 11அணியில் அதிரடி மாற்றங்களை அடுக்கும் தோனி! CSKவில் களம் இறங்க உள்ள ‘Surprise Package’..!

110
Advertisement

IPL போட்டியின் 16வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கலாம் என்ற அனுமானங்கள் வலுத்து வருவதால் CSK அணி பங்குபெறும் போட்டிகள் அதிக கவனம் பெற்றுள்ளதோடு, பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், Playoff சுற்றுக்கு சென்ற பின், அணியின் பதினோரு பேரைப்பற்றியும் தோனி முக்கிய முடிவுகளை எடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதுவரை 11 போட்டிகளில் ஆடியுள்ள CSK அணி, நான்கு முறை மட்டுமே தோல்வி அடைந்துள்ளது எனக் கூறுமளவுக்கு சிறப்பான form மீட்டெடுக்கப்பட்டுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் ருதுராஜ், கான்வே மற்றும் ரஹானே ஆகியோர் அடங்கிய டாப் ஆர்டரில் எந்த மாற்றமும் இருக்காது எனக் கூறப்படுகிறது.

மிடில் ஆர்டருக்கு பலம் சேர்க்கும் துபே மற்றும் ஜடேஜா தொடர்ந்து அணியில் நீடிப்பார்கள். மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, தீக்சனா ஆகியோர் சிறப்பாக பௌலிங் செய்து வரும் நிலையில் மொயின் அலி பெரிதாக நம்பிக்கை அளிக்க தவறியுள்ளார்.

Batingஇலும் அவர் சொதப்புவதால் மொயின் அலிக்கு பதிலாக சான்ட்னர் ஆட வாய்ப்புள்ளது. தீக்சனாவிற்கு பதிலாக batingஇன் போது impact வீரராக பென் ஸ்டோக்ஸ் களம் இறக்கப்பட வாய்ப்பு உள்ளது. இக்கட்டான நேரங்களில் தோனி அவரை surpriseஆக பயன்படுத்துவார் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் ரசிகர்களிடையே அடுத்தடுத்த CSK போட்டிகளை பற்றிய எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.