காபூலில் கல்வி மைய குண்டுவெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 32-ஆக அதிகரிப்பு

170

காபூலில் கல்வி மைய குண்டுவெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தஷ்ட் இ பார்ச்சி நகரில் செயல்பட்டு வரும் உயர்கல்வி மையத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இந்த குண்டு வெடிப்பால் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் மாணவிகள் உட்பட32 பேர் உயிரிழநத்னர்.

பலர் படுகாயமடைந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவா அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.