2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தூக்கிட்டு தற்கொலை

206

பழனி பாண்டியன் நகரில் ஃபர்கான் என்பவர் மனைவி சபீனா மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் உறவினர்கள் சந்தேகம் அடைந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது தாய் சபீனா, இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Advertisement

தகவல் அறிந்து வந்த போலீசார், 2 உடல்களையும் கைப்பற்றி, பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.