கோயில் திருவிழா முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் மாட்டுவண்டி பந்தயம்

241

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரிய நாயகிபுரம் கிராமத்தில், கோயில் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

பந்தயத்தில் 34 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன.

2 சுற்றுகளாக நடத்தப்பட்ட மாட்டுவண்டி பந்தயத்தை விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில், எதிரணைப்பட்டி மற்றும் தேனியைச் சேர்ந்த மாட்டுவண்டிகள் முதலிடத்தையும், சிறைப்பாறை மற்றும் எதிரணைப்பட்டியைச் சேர்ந்த மாட்டுவண்டிகள் இரண்டாவது இடத்தையும் பிடித்தன.

போட்டியில் வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கும் விழா கமிட்டியின் சார்பில் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.