நகரும் வீட்டை நிஜமாக்கிய காதல் ஜோடி

159
Advertisement

நம் வீடும் நம்முடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பது நம்மில் பலரது நிறைவேறாத விருப்பம். ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த Luther Griffiths மற்றும் Abbie Lewis தம்பதியினர் இந்த கனவை நினைவாக்கி உள்ளனர்.

72 சீட் கொண்ட பள்ளி பேருந்து ஒன்றை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்துள்ள இந்த ஜோடி, அந்த பேருந்தை தங்கள் வீடாக மாற்றி வருகின்றனர்.

வாடகை அல்லது சொந்த வீடு வாங்குவதை விட இப்படி செய்வதன் மூலம் பெருமளவு பணத்தை மிச்சப்படுத்த முடியும் என கூறும் லூதர், பேருந்துகளை வடிவமைப்பதில் அனுபவம் இருப்பதால் தானே மறுசீரமைப்பு பணிகளை செய்து வருகிறார்.

Advertisement

இந்த வருட இறுதிக்குள் பேருந்து ஒரு அழகிய வீடாக மாற்றம் பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ள Abbie, இதனால் தாங்கள் சுதந்திரமான உணர்வுடன் வாழவும், பல புதிய பயணங்களை மேற்கொள்ளவும் முடியும் என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.