அதிகரிக்கும் கொரோனா தொற்று

267

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக ஏற்றம் இறக்கமாக உள்ளது.

தமிழகத்தில் பெருமளவு குறைந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக சற்று அதிகரித்து வருகிறது.

அதன்படி தமிழகத்தில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98ஆக பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக செங்கல்பட்டில் 46 பேருக்கும், சென்னையில் 44 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர், கோவையில் தலா 2 பேருக்கும், காஞ்சிபுரம், வேலூரில் தலா ஒருவருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எஞ்சிய 32 மாவட்டங்களில் கொரோனா தொற்று பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 49 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 542 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவால் நேற்று எந்த உயிரிழப்பும் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.