தமிழகத்தில் மீண்டும் கொரோனா ஆட்டம் ஆரம்பம்…

309
Advertisement

தமிழகத்தில் 2-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து, ஆயிரத்து 693 ஆக பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் ஆயிரத்து 693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்து 40 ஆயிரத்து 361ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

சென்னையில் மட்டும் 202 பேருக்கும், கோவையில் 206 பேருக்கும், செங்கல்பட்டில் 135 பேருக்கும், ஈரோட்டில் 134 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 548 பேர் மீண்ட நிலையில், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 88 ஆயிரத்து 334ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும்16 ஆயிரத்து 756 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 25 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 35 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.