பிச்சைக்காரர் அளித்த 7 லட்ச கொரோனா நிவாரண நிதி

    402
    begger
    Advertisement

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள ஆலக்கிணறு கிராமத்தை சேர்ந்த முதியவர் கூல் பாண்டி. இவர் அன்றாடம் யாசகம் பெற்றே வாழ்ந்து வருகிறார் .

    கூல்பாண்டி கல்வி கற்கவில்லை என்றாலும் ,தான் யாசகம் பெற்ற பணத்தை தனக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளுக்கு வழங்கி , பலர் கல்வி கற்க உதவியுள்ளார் .

    கடந்த ஒரு வருடத்திற்குள் மட்டும், முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 7 1/2 லட்சம் வரை அனுப்பியுள்ளார்.

    கூல் பாண்டியின் உதவும் மனப்பான்மையை அறிந்த சுற்றுவட்டார மக்கள், அவர் யாசகம் பெற வந்தாலே தாராளமாக உதவி செய்து வருகிறார்கள்.

    இதனால் தான் இவ்வளவு குறுகிய காலத்தில் 7 1/2 லட்சம் வரை முதலமைச்சரின் நிவாரண நிதி அனுப்பியிருக்கிறார் .

    உதவிகளை செய்ய பணம் தேவையில்லை, மனம் இருந்தால் போதும், பணம் தானாக வந்து சேரும் என்பதை நிரூபிக்கும் வண்ணமாக கூல் பாண்டியின் இந்த செயல் அமைந்துள்ளது.