ஜூன் மாதம் கொரோனா 4-வது அலை?

545
corona
Advertisement

கொரோனா 4-வது அலை எவ்வளவு விரைவாக வேண்டுமானாலும் வரலாம். எனவே பொதுமக்கள் கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு எச்சரித்துள்ளார்.

திருச்சியில் போலியோ சொட்டு மருந்து போடும் பணியை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு இன்று தொடக்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோது: திருச்சி மாவட்டத்தில் 1,569 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணி தொடங்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2,35,146 பேருக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட உள்ளது.

கொரோனா 4-வது அலை ஜூன் மாதம் வரலாம் என்றும், ஆகஸ்ட் இறுதியில் தீவிரமாகும் என்றும் கூறப்படுகிறது. கொரோனா 4-வது அலை எவ்வளவு விரைவாக வேண்டுமானாலும் வரலாம். எனவே தொடர்ந்து கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்தால் பாதிப்புகளை குறைக்கலாம் என்றார்.