தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

251

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 552 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகமாக உள்ளது.

இதனால், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  552 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 253 பேருக்கும், செங்கல்பட்டில் 129 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா 32 பேருக்கும், திருவள்ளூரில் 30 பேருக்கும், குமரி மாவட்டத்தில்14 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர், விழுப்புரம், நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் 177 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கொரோனா தொற்று பாதிப்புடன் 2 ஆயிரத்து 313 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.