“சென்னையில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும்”

43

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரித்தார்.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 300-ஐ தாண்டிய நிலையில், இன்று 400-ஐ தாண்ட வாய்ப்பு உள்ளது என்றும் கொரோனா அதிகரிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.

Advertisement