“தமிழகத்தில் கொரோனா சிறிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது”

340

தமிழகத்தில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

100 க்கு கீழ் இருந்த தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் BA4, BA5 வகை உருமாறிய கொரோனா தொற்று பதிவாக தொடங்கியுள்ளது என்றும் ஆனால், இது கொரோனா அலை கிடையாது என்வும் கூறினார்.

வரும் 12ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்றும் அனைத்து இடங்களுக்கும் தேவையான தடுப்பூசி அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.