“கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்”

372
  1. சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, பெருங்குடி, கோடம்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட 5 மண்டலங்களில் தொடர்ந்து கொரோனா பரவல் உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, அவர் எழுதியுள்ள கடிதத்தில், டெல்லி, மகாராஷ்ரா,கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 93.24 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசியும் 82.55 சதவீதத்தினர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.