சில இடங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு

383

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கும் முறை குறித்து மருத்துவர்களுக்கு பயிற்சி வகுப்பை ஓமந்தூரார் மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்ட 6 மாணவர்களை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கொரோனா கிளஸ்டர் உருவாகிறது எனவும் கூறினார்.

“பிஏ”4 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பொதுமக்கள் கவனக்குறைவாக உள்ளனர் எனறும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

பொது சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.