பிரேசிலில் கண்டெய்னர் கிடங்கு இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்

270

பிரேசிலில் கண்டெய்னர் கிடங்கு இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சாவ் பாலோ மாகாணத்தில்  வணிக நோக்கங்களுக்காக கன்டெய்னர்களை குத்தகைக்கு விடும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்கு ஒன்று உள்ளது. நூற்றுக்கணக்கான கன்டெய்னர்கள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் இந்த கிடக்கில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த கிடங்கின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இதில் தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கினர். இதையடுத்து,  சக தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களும் தீவிர மீட்பு பணியில் இறங்கினர்.  பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர்  9 தொழிலாளர்கள் சடலமாக மீட்டகப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.