காங்கிரஸ் ரயில்மறியல்..! தள்ளுமுள்ளு..வாக்குவாதம்..!

136
Advertisement

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், இன்று தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தை, தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.அப்போது போராட்டத்தில் ஈடுபட முயன்ற 150 க்கு மேற்பட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்களை போலீசார் பேரிக்காடுகளை வைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் காவல் துறையினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.