2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மக்களை ஆச்சரியப்படுத்தும் என்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்….

97
Advertisement

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுள்ளதாகவும், இந்த ஒற்றுமை மேலும் வலுப்பெறும் என்று தெரிவித்தார். அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, தேர்தலின்போது எதிர்க்கட்சிகளுடன் போட்டியிடும் இடங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

இது சிக்கலானது என்பதால், கொடுக்கல் வாங்கல் தேவை இருப்பதாக கூறினார். இருப்பினும் இந்த சாத்தியக்கூறுகள் அனைத்தும் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். அதன்படி, 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மக்களை ஆச்சரியப்படுத்தும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.