ஏராளமான சொத்துக்கள் பறிமுதல்; கரூர் ஐடி ரெய்டு முடிவுக்கு வந்தது….

127
Advertisement

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகள்,

அலுவலகங்களில் 8 நாட்களாக நடந்து வந்த வருமானவரித் துறை சோதனை இன்றுடன் முடிவுக்கு வந்தது. மேற்கண்ட இடங்களில் நடந்த சோதனைகளில் கணக்கில் வராத 3.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 350 கோடி வருவாய் மறைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் சம்மன் அனுப்பப்பட்ட ஆவணமாகவும் வருமானவரித் துறையில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக இன்று அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் சோதனை நடந்தது. செங்கோட்டையன் அலுவலகத்தில் இருந்து இரண்டு பெரிய பெட்டிகளை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

அந்த பெட்டியில் பினாமி பெயர்கள் வாங்கிய பல கோடி ரூபாய் சொத்துக்கள் குறித்த ஆவணங்கள் இருந்ததாக சொல்லப்பட்டது. மேலும், சோதனை முடிவுக்கு வந்துள்ளதால் காவல்துறை பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல, சீல் வைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.